
மோகன்லாலின் பான் இந்திய படத்தில் அறிமுகமாகும் சஞ்சய் கபூரின் மகள்
இதில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் மேகா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் கபூரின் மகள் ஷனாயா கபூர் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர், தான் இயக்க உள்ள படத்தில் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில் மோகன்லால் படம் மூலம் ஷனாயா கபூர் அறிமுகமாக இருப்பதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள கரண் ஜோஹர், “மோகன்லால் படத்தில் இணைந்து நடிப்பதன் மூலம் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை நீ கற்றுக் கொள்ள முடியும்.. வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!