
ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டத்துக்கு பிரிங்கா சோப்ரா ஆதரவு
இந்த போராட்டத்துக்கு ஹாலிவுட் நடிகர் கூட்டமைப்பும் ஆதரவு தெவித்துள்ளது. இந்த அமைப்பில் நடிகர் நடிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருபவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்பட 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இதனால், கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த ஹாலிவுட் சினிமா வட்டாரமும் ஸ்தம்பித்து காணப்படுகிறது. படப்பிடிப்புகளை தவிர சினிமா நடிகர், நடிகைகள் யாரும் டப்பிங், நடனம், இசை போன்ற எந்த திரைப்பட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு முன்னணி நடிகர்கள் மெரில் ஸ்ட்ரீப், ஜெனிபர் லாரன்ஸ், மெட் டேமன், புளோரன்ஸ் பக், ரம் மலெக் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: ஹாலிவுட் எழுத்தாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். நமது ஒற்றுமை, நமக்கான சிறந்த நாளை நிச்சயம் உருவாக்கும். என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போராட்டத்தில் நடிகர், நடிகைகளும் இணைந்துள்ளதால் சினிமா, வெப் தொடர் போன்ற பணிகள் அனைத்துமே பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால் கடந்த 63 ஆண்டுகளில் முதன் முறையாக ஹாலிவுட் முடங்கும் சூழல் உருவாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!