
ஜவான் தமிழ் டிரைலருக்கு ரசிகர்கள் வரவேற்பு
24 மணி நேரத்தில் ஹிந்தி டிரைலர் 45 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஷாரூக்கான் நடித்து இதற்கு முன்பு வெளியான "பதான்" படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 27 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றது. அந்த சாதனையை "ஜவான்" டிரைலர் முறியடித்துள்ளது. இருப்பினும் இதுவரை வெளியான ஹிந்தித் திரைப்பட டிரைலர்களின் 24 மணி நேர சாதனையை "ஜவான்" படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறவில்லை.
பிரபாஸ் நடித்து வெளிவந்த "ஆதிபுருஷ்" ஹிந்திப் படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 52 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனையைப் படைத்தது. அந்த சாதனையை "ஜவான்" டிரைலர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது முறியடிக்கப்படவில்லை.
அதே சமயம் "ஜவான்" தமிழ் டிரைலருக்கு 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்து வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்துடன் அட்லீ, அனிருத், விஜய் சேதுபதி, நயன்தாரா என பல தமிழ் சினிமா தொடர்பு உள்ளதால்தான் இந்த வரவேற்பு. "ஜவான்" தெலுங்கு டிரைலர் 4 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அனைத்து விதமான தளங்களிலும் "ஜவான்" டிரைலர் 112 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!