
இந்திய சினிமாவிலே அதிக விலைக்கு வியாபாரம் ஆன ஷாருக்கான் படம்
இதை தொடர்ந்து 3 இடியட்ஸ், சஞ்சு, பி.கே போன்ற படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாருக்கான் டன்கி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் டாப்ஸி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகின்ற டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் பிஸ்னஸ் தற்போது துவங்கியுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜியோ சினிமாஸ் நிறுவனம் ரூ. 155 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மொழியில் இதுதான் இந்திய சினிமாவிலே அதிக விலைக்கு வியாபாரம் ஆன படம் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!