
தள்ளிப் போகும் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்?
இப்படத்தை முதலில் செப்டம்பர் 1ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது பட வெளியீட்டை அடுத்த வருடம் பிப்ரவரி 16ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அக்ஷய்குமார் நடித்துள்ள சில படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளதால் இப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது.
அக்ஷய்குமார் நடித்துள்ள "ஓ மை காட் 2" படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கடுத்து அவர் நடித்து வரும் "த கிரேட் இந்தியன் ரெஸ்க்யூ" படம் அக்டோபரில் வெளியாக உள்ளது. அடுத்தடுத்து பட வெளியீடுகளில் சிக்கிக் கொள்ள வேண்டாமென்று தான் அடுத்த வருடம் பிப்ரவரிக்கு தள்ளி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அக்ஷய் குமார் நடித்து கடைசியாக வெளிவந்த ஐந்து ஹிந்திப் படங்களுமே தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!