
வெளியானது கரண் ஜோஹரின் ஆர்ஆர்கேபிகே டிரைலர் - பூவெல்லாம் கேட்டுப் பார், ஜோடி படங்களின் தழுவலா ?
இரண்டு படங்களின் கதைகளுமே ஒரே கதைகள்தான். காதலர்கள் தங்களது பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற காதலன் வீட்டில் காதலியும், காதலி வீட்டில் காதலியும் ஒரு காரணத்தைச் சொல்லி நுழைந்து அவர்களது மனதில் இடம் பிடிக்க முயற்சிப்பதுதான் இரண்டு படங்களின் கதை.
அதே கதையைத்தான் இப்போது கரண் ஜோஹர் ""ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி" என பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார். படத்தில் கதாநாயகன் ரன்வீர் பஞ்சாபி பையனாகவும், ஆலியா பொங்காலி பெண்ணாகவும் நடித்திருக்கிறார்கள். இந்தக் கால பாலிவுட் ஸ்டார்கள், அந்தக் கால பாலிவுட் ஸ்டார்கள், கரண் ஜோஹரின் இயக்கம் ஆகியவைதான் இந்தப் படத்திற்கு பிளஸ் ஆக அமையப் போகிறது என்பது டிரைலரைப் பார்த்ததும் தெரிய வருகிறது.
1999ல் தமிழில் வெளியான "ஜோடி, பூவெல்லாம் கேட்டுப்பார்" ஆகிய இரண்டு படங்களுமே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அவற்றின் தழுவலாக 24 வருடங்களுக்குப் பிறகு வரப் போகும் இந்த ஹிந்திப் படம் எப்படி வரவேற்பைப் பெறப் போகிறது என்பது படம் வெளியாகும் ஜுலை 28 அன்று தெரிய வரும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!