
கருப்பு தான் கஜோலுக்குப் புடிச்ச கலரு….
கஜோல் இப்போதும் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். 30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் பிரபலமாக இருப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கஜோல் நேற்று கருப்பு நிற ஆடையில் சில புகைப்படங்களைப் பதிவிட்டு "பிளாக்" என்பதற்கான அர்த்தம் என்ன என்பதையும் குறிப்பிட்டுள்ளார். "பி" என்றால் போல்டு (தைரியமான), எல் என்றால் "லேசிலி லவ்லி" (சோம்பேறித்தனமான அழகு), ஏ என்றால் "ஆல் இஸ் வெல்" (அனைவரும் நலம்), சி என்றால் "காபி", கே என்றால் அது கஜோல் எனப் பதிவிட்டுள்ளார். 50ஐ நெருங்கும் வயதிலும் கஜோல் அழகுடனே அசத்துகிறார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!