
எங்களை தண்டிப்பதற்காகவே ஒன்று கூடி உள்ளனர் : விரக்தியில் ‛தி கேரள ஸ்டோரி இயக்குனர்
இத்தகைய சர்ச்சையை, பரபரப்பை கிளப்பிய படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கி இருந்தார். கதாநாயகியாக அடா சர்மா நடித்திருந்தார். படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்கு நிறைய ரசிகர்கள் படை எடுத்தனர். அதனால் சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. அதே சமயம் தற்போது இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இயக்குனர் சுதிப்தோ சென் முயற்சி எடுத்து வரும் நிலையில் எந்த ஒரு ஓடிடி தளமும் இதுவரை இந்த படத்தை வாங்க முன் வரவில்லை.
குறிப்பாக இவர்கள் கேட்கும் நியாயமான தொகையை கூட அவர்கள் ஏற்க மறுத்து படத்தை வாங்க மறுக்கின்றனர் என கூறியுள்ளார் இயக்குனர் சுதிப்தோ சென். அதுமட்டுமல்ல இந்த படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே வெறுப்பையும் வன்மத்தையும் வெளிப்படுத்திய திரை உலகை சேர்ந்த பலரும் ஒரு குரூப்பாக சேர்ந்து இந்த படத்தை ஓடிடி தளத்தில் விற்பனை செய்ய விடாமல் தடுத்து எங்களுக்கு தண்டனை தர நினைக்கின்றனர்” என்று தனது விரக்தியையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!