
சினிமாவில் 25 ஆண்டுகள் : கரண் ஜோஹருக்கு ஷாரூக்கான் வாழ்த்து
கரண் ஜோஹர் தற்போது இயக்கி வரும் "ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி" என்ற படத்தின் டீசர் நேற்று வெளியானது. சினிமாவில் கரணின் 25வது ஆண்டில் வெளியாகியுள்ள அந்த டீசரைப் பகிர்ந்து நடிகர் ஷாரூக்கான், “வாவ் கரண் ஜோஹர்…திரைப்பட உருவாக்குனராக 25 ஆண்டுகள்…நீ நீண்ட தூரம் வந்துவிட்டாய் பேபி…உனது தந்தையும் எனது நண்பருமான டாம் அங்கிள் இதை சொர்க்கத்தில் இருந்து பார்த்து மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்வார். உங்களிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், நீங்கள் இன்னும் நிறைய நிறைய படங்களை இயக்க வேண்டும். வாழ்க்கையில் காதலின் மேஜிக்கைக் கொண்டு வர நீங்கள் தேவை. அது உங்களால் மட்டுமே முடியும்.. "ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி" டீசர் அழகாக உள்ளது. உங்களுக்கும் குழுவினருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!