
ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி - 7 வருடங்களுக்குப் பிறகு கரண் ஜோஹர் படம்
அதற்குப் பிறகு "லஸ்ட் ஸ்டோரிஸ்" வெப் தொடரின் ஒரு பகுதியையும், "கோஸ்ட் ஸ்டோரிஸ்" வெப் தொடரின் ஒரு பகுதியையும் மட்டும் இயக்கினார். திரைப்படங்கள் எதையும் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கி வரும் படம் "ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி". இப்படத்தில் தர்மேந்திரா, ஜெயா பச்சன், ஷபனா ஆஸ்மி, ரன்வீர் சிங், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் டீசரின் முதல் பாதியில் ரன்வீர் சிங், ஆலியா பட்டும், அடுத்த பாதியில் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களும் இடம் பெறும் விதத்திலும் டீசர் உள்ளது. கரண் ஜோஹரின் வழக்கமான பிரமாண்டம், அவரது படங்களில் பார்த்த இசை இடம் பெற்றுள்ளது. காதலும், குடும்ப உறவுகளும் கலந்த கதையாக இருக்கும் இப்படம் ஜுலை 28ம் தேதியன்று வெளியாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!