
செப்டம்பர் 7ம் தேதி ஜவான் ரிலீஸ் : ஷாருக்கான் உறுதி
இந்த நிலையில் ஷாருக்கான் மாதம்தோறும் தனது ரசிகர்களுடன் "ஆஸ்க் எஸ்ஆர்கே" என்ற நிகழ்ச்சி மூலம் சமூக வலைத்தளத்தின் தன் ரசிகர்களுடன் உரையாடுவார். அப்படி ஒரு உரையாடல் நேற்று நடந்தது. இதில் பெரும்பாலான ரசிகர்கள் ஜவான் ரிலீஸ் தேதி பற்றித்தான் கேட்டார்கள்.
அதற்கு பதிலளித்த ஷாருக்கான் “செப்டம்பர் 7ம் தேதி ஜவானை நீங்கள் கண்டிப்பாக சந்திக்கலாம். அட்லியுடன் கூலாக வருகிறார் ஜவான். இந்த படத்திற்காக நான் நிறைய உழைத்திருக்கிறேன். ஜவான் நிறைய சவால்கள் நிறைந்த படைப்பாக இருந்தது. விஜய்சேதுபதி எனக்கு பிடித்த நடிகர். அவர் கூலான மனிதர், ஆனால் படத்தில் வில்லன்” இவ்வாறு ஷாருக்கான் தனது பதிலில் கூறியிருக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!