பாலிவுட் நடிகர் மங்கள் தில்லான் காலமானார்
ஜூன் 11, 2023
Advertisement
பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் ஹிந்தி டிவி தொடர்கள் மூலம் பிரபலமானவர் மங்கள் தில்லான். 1986ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான "புனியாட்" மற்றும் 1988ம் ஆண்டு ஒளிபரப்பான "கூன் பாரி மாங்" ஆகிய தொடர்களின் மூலம் இவர் பிரபலமடைந்தார். அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர், மீண்டும் 1993ம் ஆண்டு ஒளிபரப்பான "ஜுனூன்" தொடரில் இடம்பெற்றார்.
"பியார் கா தேவ்தா", "ரன்பூமி", "ஸ்வர்க் யஹான் நர்க் யஹான்", "விஷ்வாத்மா", "தில் தேரா ஆஷிக்", "ட்ரெய்ன் டு பாகிஸ்தான்" உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் மங்கள் தில்லான் நடித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்வு தில்லானுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால் பஞ்சாபில் உள்ள லூதியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக உடல்நிலை மோசமடையவே இன்று (ஜூன் 11) சிகிச்சை பலனின்றி மங்கள் தில்லான் காலமானார். அவருக்கு வயது 78. அவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!