
இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன்
1971ம் ஆண்டு பிரேம் சோப்ரா நடிப்பில் வெளியான "ஹல்சுல்" என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜீனத் அமன். 1970 மற்றும் 80களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். "தம்மர தம்" என்ற பாடலில் ஆடி அந்த காலத்து இந்திய இளைஞர்களை கிறங்கடித்து இருந்தார். 1978 ஆம் ஆண்டு வெளிவந்த "சத்தியம் சிவம் சுந்தரம்" படத்தில் கவர்ச்சியாக நடித்தது அப்போது சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்தார். பாலிவுட் சினிமா சரித்திரத்தில் முதன் முறையாக ஒரு ஹீரோயினுக்காக ஹிட்டான படம் என்றால் அது ஜீனத் அமன் படம்தான்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!