
தடைகளை தாண்டி சாதனை: 200 கோடி வசூலித்த தி கேரளா ஸ்டோரி
கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால் வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு இந்த படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் 37 நாடுகளில் திரையிடப்பட்டது. இந்த நிலையில் படம் வெளியாகி 18 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் உலகம் முழுவதும் படம் 203 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம் 200 கோடியை தாண்டி வசூலித்திருப்பது திரையுலகில் ஆச்சர்ய அலைகளை ஏற்படுத்தி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!