
மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு ; புதிய திட்டத்தை துவங்கிய ‛தி கேரளா ஸ்டோரி படக்குழு
இந்த நிலையில் இப்படி மதமாற்றம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் விதமாக தற்போது அப்படி பாதிக்கப்பட்ட 300 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கென ஒரு ஆசிரமம் உருவாக்கப்பட்டு மறுவாழ்வுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டத்தை படத்தின் தயாரிப்பாளர் விபுல்ஷா துவங்கி வைத்துள்ளார். அதுமட்டுமல்ல இதற்காக 51 லட்சம் ரூபாய் தொகையையும் வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படம் எடுக்கப்பட்டதன் நோக்கமே இப்படி பாதிக்கப்பட்ட பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான். இந்த படம் அதை பெருமளவில் செய்து வருகிறது. அந்த நோக்கத்தை மேலும் நிறைவேற்றும் விதமாக தான், தற்போது இந்த புதிய திட்டத்தை துவங்கியுள்ளோம். நானும் தி கேரள ஸ்டோரி படக்குழுவினரும் சேர்ந்து இதற்காக 51 லட்சம் ரூபாய் நிதியை வழங்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!