
மத்திய பிரதேசத்தில் ‛தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரிவிலக்கு
கடந்த வெள்ளியன்று போலீசார் பாதுகாப்புடன் இந்த படம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் இந்த படத்திற்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த படம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதால் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள், குறிப்பாக மகள்களுடன் சென்று இந்த படத்தை பார்ப்பதற்கு வசதியாக வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!