
அமீர் கான் நடிப்பில் கஜினி 2 உருவாகிறதா?
சில வருடங்களாக அமீர்கான் நடித்த திரைக்கு வந்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. இதனால் நடிப்பில் இருந்து கொஞ்ச காலம் ஓய்வு எடுத்து குடும்பத்தினரோடு நேரத்தை செலவிட இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
தற்போது தனது அடுத்த படத்திற்காக நிறைய இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஆனால், எந்த கதையிலும் திருப்தி இல்லை என்பதால் இப்போது கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்கான திரைக்கதை தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் உடன் கஜினி இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து அமீர்கான் பேசி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!