
இயக்குனராகும் ஆர்யன் கான்
தற்போது மகன் ஆர்யன் கானின் கவனத்தை வேறு வழியில் திருப்ப முடிவு செய்திருக்கிறார் ஷாருக்கான். ஆர்யன் கான் தனக்கு நடிப்பில் ஆர்வமில்லை என்று ஏற்கெனவே அறிவித்து விட்டார். இதனால் அவரை இயக்குனராக்குகிறார் ஷாருக்கான். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துடன் இணைந்து "ஸ்டார்டம்" என்ற வெப் தொடரை ஷாருக்கான் தயாரிக்கிறார். இந்த தொடரை இயக்கும் பொறுப்பை மகனிடம் கொடுத்திருக்கிறார். இது பாலிவுட் சினிமாவின் பின்னணியில் இருக்கும் அண்டர்வேர்ல்ட் பற்றிய கதையாம். சினிமாவுக்கு தாதாக்களுக்கும் உள்ள தொடர்பு. போதை மருந்து புழக்கம் உள்ளிட்ட பல விஷயங்களை இந்த தொடரில் வெளிப்படையாக காட்ட இருக்கிறார்களாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!