
அன்பே என அழைக்க வேண்டியவர் அண்ணா என அழைக்கிறார்: காதல் ராசி குறித்து சல்மான்கான்
இந்த நிலையில் தற்போது சல்மான்கான் நடிப்பில் வெளியாகி உள்ள ‛கிஸி கா பாய் கிஸி கி ஜான்" படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சல்மான்கானிடம் அவரது காதல் ராசி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சல்மான்கான், "காதலுக்கும் எனக்கும் ராசியில்லை. என்னை காதலன் (ஜான்) என்று அழைக்க வேண்டியவர் அண்ணா (பாய்) என்று அழைத்துக் கொண்டிருக்கிறார்" என வேடிக்கையாக கூறியுள்ளார்.
இந்தப்படத்தில் நடிக்க துவங்கிய சமயத்தில் இருந்தே, கடந்த சில மாதங்களாக சல்மான்கானுக்கும் பூஜா ஹெக்டேவிற்கும் காதல் என்று மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது சல்மான் கான் இப்படி கூறியுள்ளது பூஜா ஹெக்டேவை மனதில் வைத்து தானா என்று சோஷியல் மீடியாவில் மீண்டும் ஒரு விவாதம் தொடங்கியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!