
கைதி ரீமேக்கை காலி பண்ணியாச்சி : அடுத்து வீரம் ரீமேக் என்னாகுமோ ?
"கைதி" படத்தை ஹிந்தியில் "போலா" என ரீமேக் செய்து பத்து நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். "கைதி" படத்தில் இருந்த அந்த தரத்தை தவிடுபொடியாக்கி வெறும் கமர்ஷியல் படமாக மட்டுமே ஹிந்தியில் கொடுத்திருந்தார்கள். பெரும் வசூலைப் பெற முடியாமல் அந்தப் படம் தடுமாறி வருகிறது.
இந்நிலையில் அஜித், தமன்னா நடித்து 2014ல் வெளிவந்த "வீரம்" படத்தை ஹிந்தியில் சல்மான் கான், பூஜா ஹெக்டே, தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்க "கிசி கா பாய் கிசி கி ஜான்" என ரீமேக் செய்து வருகிறார்கள். அதன் டிரைலரை நேற்று வெளியிட்டார்கள்.
டிரைலரின் முதல் பாதியில் சல்மான், பூஜா இடையிலான காதல் காட்சிகளும், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் மட்டுமே இடம் பெறும் விதத்திலும் டிரைலர் உள்ளது. கடந்த 16 மணி நேரங்களில் 8 மில்லியன் பார்வைகளை இந்த டிரைலர் கடந்துள்ளது. ஹிந்தியிலும் அதிரடி மசாலாப் படமாகவே எடுத்திருக்கிறார்கள் என்பதை டிரைலரைப் பார்க்கும் போதே தெரிகிறது. ஏப்ரல் 21ம் தேதி இப்படம் வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!