
மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்!
ஆரியன்கான் விரைவில் இயக்குனராக அறிமுகமாக போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர் புதிதாக மதுபான பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இதனை விளம்பரப்படுத்தும் வகையில் சினிமா மற்றும் டிவி நடிகர் நடிகைகளுக்கு மும்பையில் அவர் ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார். அப்போது பல நடிகைகளுடன் ஆரியன்கான் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதைப்பார்த்து ஏற்கனவே போதை பொருள் வழக்கில் சிக்கிய ஆரியன்கானுக்கு இதுபோன்ற சரக்கு பிசினஸ் தேவையா? என்கிற கேள்விகளும் சோசியல் மீடியாவில் அவரை நோக்கி எழுந்து கொண்டிருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!