
ஹிந்தியில் ரீமேக் ஆகும் மலையாளப் படம்
விபின் தாஸ் இயக்கத்தில் பசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன், அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்த இப்படதிற்கு அங்கிட் மேனன் இசையமைத்திருந்தார். ஓடிடி வெளியீட்டின் மூலம் பலதரப்பு ரசிகர்களை சென்றடைந்த இந்த படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆமீர்கான் முடிவு செய்திருக்கிறார்.
மலையாளத்தில் படத்தை இயக்கிய விபின் தாஸே ஹிந்தியில் இயக்குகிறார். மேலும், தர்ஷனா ராஜேந்திரன் நடித்த கேரக்டரில் "தங்கல்" பட புகழ் நடிகையும், தற்போது ஆமீர்கானுக்கு நெருக்கமான தோழியாக இருப்பவருமான பாத்திமா சனா ஷேக் நடிக்கிறார். இதுபற்றிய முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!