
விரைவில் நடிக்க வருகிறாரா அஜய் தேவகன் - கஜோல் மகள்?
அந்தப் புகைப்படங்களில் அப்படியே அம்மா கஜோல் போலவே இருக்கிறார். நைசா புகைப்படத்தையும், கஜோல் புகைப்படத்தையும் பகிர்ந்து அம்மாவைப் போலவே மகளும் அழகு என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். நைசாவின் பல கிளாமர் புகைப்படங்கள் ஏற்கெனவே இணையங்களில் சர்ச்சை கலந்த வரவேற்பைப் பெற்றவை.
பாலிவுட்டில் நட்சத்திர தம்பதியரின் வாரிசு, நடிகர், நடிகைகளின் வாரிசுகளுக்குப் பஞ்சமில்லை. அந்த வரிசையில் விரைவில் நைசாவும் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அஜய் தேவகன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள "கைதி" படத்தின் ஹிந்தி ரீமேக்கான "போலா" இந்த மாதம் 30ம் தேதி வெளியாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!