
மகாபாரதம் - ஆமீர்கான் உடன் பேச்சுவார்த்தையா?
இதனிடையே, பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆமீர்கான் ஹைதராபாத்திற்குச் சென்று கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. அல்லு அர்ஜுன் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிறுவனம்தான் இந்த நிறுவனம். ஆமிர்கானை ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து அல்லு அர்ஜுன் வீடு இருக்கும் ஜுபிலி ஹில்ஸ் பகுதிக்கு அல்லு அர்ஜுனின் கார் மூலம்தான் அழைத்து வந்துள்ளார்கள்.
ஆமீர்கான் கடைசியாக நடித்து வெளிவந்த "லால் சிங் சத்தா" படம் படுதோல்வி அடைந்தது. அதற்குப் பிறகு அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. "மகாபாரதம்" ஓடிடிக்கென பிரத்யேகமாக பிரம்மாண்டமாக உருவாகும் எனத் தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!