
பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் வெப் சீரிஸ்: ஏப்ரல் 28ல் வெளியாகிறது
8 ஆண்டுகளுக்கு முன்பு, நிழல் உலகை ஆண்டுக்கொண்டிருந்த வலிமை மிக்க அதிகாரக் குழுவான மாண்டிகோர் சிட்டாடல் எனும் உலக புகழ்பெபற்ற உளவு நிறுவனத்தை அழித்து விடுகிறது. சிட்டாடல் உயர்நிலை உளவுத் துறை அதிகாரிகளான மேசன் கேன் (ரிச்சர்ட் மேடன்) மற்றும் நதியா சின் (பிரியங்கா சோப்ரா) இருவரும் மயிரிழையில் உயிர் தப்பினாலும் கடந்த கால நினைவுகள் முற்றிலுமாகத் அவர்களுக்கு மறந்து விடுகிறது. தங்கள் கடந்த காலத்தை பற்றி எதுவும் அறியாதவர்களாக, புதிய அடையாளங்களோடு ஒரு புதிய வாழ்கை வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த நேரத்தில் ஒரு நாள் இரவு அவர்களின் கடந்த காலம் பற்றி தெரிய வருகிறது. தங்களை அழித்தவர்களை அழிக்க புறப்படுகிறார்கள். இந்த முறை அவர்கள் வென்றார்களா என்பதுதான் தொடரின் கதை. இந்த தொடர் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதில் பிரியங்கா சோப்ரா நடிக்கும் கேரக்டரில் சமந்தா நடித்து வருகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!