
அக்ஷய் குமாரை மீட்குமா சூரரைப் போற்று ரீமேக்?
அவர் நடித்து வெளிவந்த, “பச்சன் பாண்டே, சாம்ராட் பிரித்விராஜ், ரக்ஷா பந்தன், கட்புட்லி, ராம் சேது,” ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. அந்த வரிசையில் கடந்த வாரம் வெளிவந்த "செல்பி" படமும் தோல்வியைத் தழுவியுள்ளது. வெளியான மூன்று நாட்களில் வெறும் 10 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
அக்ஷய்குமார் நடித்து அடுத்து "ஓ மை காட் 2" படம் வெளிவர உள்ளது. இப்படத்தின் வெளியீடு பற்றி இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அடுத்து தமிழில் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற "சூரரைப் போற்று" ஹிந்தி ரீமேக்கிலும் நடித்து முடித்துள்ளார். "ஓ மை காட் 2" படம் ஏமாற்றினாலும் "சூரரைப் போற்று" படம் எப்படியும் ஏமாற்றாது என அவரது ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாலிவுட் ரசிகர்கள் ரீமேக் படங்களைப் புறக்கணித்து வரும் இந்நிலையில் "சூரரைப் போற்று" ஹிந்தி ரீமேக்கிற்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!