
சம்பளத்தில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த தீபிகா படுகோன்
தற்போது பெரும்பாலான இந்தி படங்கள் பான் இந்தியா படமாக தயாராவதால் சம்பளத்தை மேலும் அதிரடியாக உயர்த்தி உள்ளார்கள். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் தீபிகா படுகோன் ஹாலிவுட் படங்களில் நடிக்க 25 கோடியும், பாலிவுட் படங்களில் நடிக்க 10 கோடியும் சம்பளமாக பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த "பதான்" படம் ஆயிரம் கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு தீபிகா படுகோனின் கவர்ச்சியும், சண்டைக் காட்சிகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் தற்போது தனது சம்பளத்தை 18 கோடியாக உயர்த்தி விட்டார். தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் "ப்ராஜெக்ட் கே" என்ற படத்தில் நடிக்க தீபிகா 18 கோடி சம்பளம் வாங்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவர் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர அமிதாப்பச்சன், திஷா பதானி ஆகியோரும் நடிக்கிறார்கள். இது சுமார் 500 கோடி செலவில் தயாராகும் பான் இந்தியா படமாகும்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!