
சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு
அதேசமயம் நேற்று காலை இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு 100 மீட்டர் அருகில் உள்ள இடத்தில் மர்ம நபர்களால் வைக்கப்பட்டிருந்த குண்டு ஒன்று வெடித்தது. இது அந்த பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் உள்ளிட்ட எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தநிலையில் இன்று அந்த பேஷன் ஷோ நடைபெறுமா ? அப்படியே நடைபெற்றாலும் சன்னி லியோன் அதில் கலந்து கொள்வாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.. கதர் மற்றும் கைத்தறி துணிகளை புரமோட் பண்ணும் விதமாக இந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!