
ஷங்கர் பட கதாநாயகிக்குத் திருமணம்
அவர்களது திருமணம் வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறலாம் என முன்னர் தகவல் வெளியானது. ஆனால், கியாரா தற்போது படப்பிடிப்புகளில் பிஸியாக நடித்து வருவதால் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திருமணத்தை நடத்த காதல் ஜோடி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகைகள் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்து வருகிறார்கள். இந்த வருடம் ஆலியா பட், ரன்பீர் கபூர் ஜோடி திருமணம் செய்து குழந்தையும் பெற்றுவிட்டார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கியாரா அத்வானி நடித்து வரும் "ஆர்சி 15" படத்திற்கான பாடல் காட்சி ஒன்று நியூசிலாந்தில் படமாகி வந்தது. நேற்றுதான் அப்பாடல் காட்சிக்கான படப்பிடிப்பை முடித்துள்ளார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!