
ஆலியா பட்டின் அவுட் ஆப் போகஸ் படத்திற்கு கூட குவிந்த லட்சக்கணக்கான லைக்குகள்
திருணமாகி, தாய்மை அடைந்த பின்னும் ஆலியா பட் அவர் நடித்து வெளிவந்த படங்களான "டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா" ஆகிய படங்களின் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டார். கணவர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த "பிரம்மாஸ்திரா" படம் பெரிய வெற்றி பெற்றது.
குழந்தை பெற்ற பின் கடந்த பத்து நாட்களாக தனது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் எதையும் பகிராமல் இருந்தார். நேற்று அவருடைய உருவம் சரியாகத் தெரியாத அளவுக்கு "அவுட் ஆப் போகஸ்" செய்து, கையில் "மம்மா" என்று எழுதியிருந்த காபி கோப்பைக்கு போகஸ் செய்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். பல பிரபலங்கள் லைக் செய்த, அந்த புகைப்படத்திற்குக் கூட 17 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!