
பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கு பெண் குழந்தை பிறந்தது!
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவரான பிபாசாபாசு 2016ம் ஆண்டு கரண்சிங் குரோவர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஆண்டு தொடக்கத்தில் பிபாஷா கர்ப்பமாக இருப்பதாக அவர் புகைப்படம் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்தான் நேற்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிபாசாபாசுவுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இந்த தகவலை அவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிபாஷா பாசு தமிழில் விஜய் நடித்த சச்சின் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!