
அடுத்த படத்தை அறிவித்த காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர்
இந்த நிலையில் தற்போது, தான் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி. அதுமட்டுமல்ல இந்தப்படம் 2023 ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் என்பதையும் தற்போதே அறிவித்து விட்டார். இந்த புதிய படத்திற்கு ‛வேக்சின் வார்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படமும் அவரது முந்தைய படத்தைப்போல சில அறியப்படாத விஷயங்களை பற்றி பேச இருக்கிறது என்பதை படத்தின் டேக்லைனிலேயே சுட்டிக் காட்டியுள்ளார் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி. அதாவது இந்தியா நடத்திய ஒரு யுத்தத்தில் நடைபெற்ற அறியப்படாத சில நிகழ்வுகளும் அந்த யுத்தத்தில் எப்படி அறிவியல்பூர்வமாக தைரியமாக மிகப்பெரிய வெற்றியை இந்தியா பெற்றது என்பது பற்றியும் சொல்ல இருக்கிறாராம் விவேக் அக்னிஹோத்ரி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!