
ரகுல் ப்ரீத் சிங்கும் போலீஸ் ஆனார்
இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இயக்குனர் இந்திரகுமார் இந்த கதையை என்னிடம் சொன்னபோது எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அதே நேரத்தில் அந்த கதை வாழ்க்கையை புரிய வைத்தது.
எனக்கு போலீஸ் வேடம் என்றதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். என் உயரம் போலீஸ் கேரக்டருக்கு சரியாக இருக்கும், ஆனால் உடற்கட்டு சரியாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்கு மேல் யோசிக்காமல் இயக்குனரிடம் என்னை ஒப்படைத்து விட்டேன். அவர் என்னை திரையில் அற்புதமாக உருவாக்கினார். இப்போது இதுபோன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!