
விஜய் தேவரகொண்டா திருமணம் குறித்து ஜான்வி கபூர் வெளியிட்ட தகவல்
சமீபத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட ஜான்வி கபூரிடம், ‛உங்களது சுயம்வரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த நடிகர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்? மூன்று பேரின் பெயர்களை கூறுங்கள்" என கேட்கப்பட்டது. அதற்கு ரன்பீர் கபூர், ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராப் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டார் ஜான்வி கபூர். ஆனால் திருமணம் ஆனவர்களின் பெயர்களை இதில் கூறக்கூடாது, வேறு யாராவது ஒரு பெயரை சொல்லுங்கள் என்று கூறியதுடன் அந்த தொகுப்பாளரே விஜய்தேவரகொண்டாவின் பெயரையும் எடுத்துக் கொடுத்தார்.
ஆனால் ஜான்வி கபூரோ விஜய்தேவரகொண்டா பிராக்டிக்கலி மேரீட் என்கிற வார்த்தையை பயன்படுத்தி அந்தப் பெயரை மறுத்துள்ளார். ஜான்வி கபூர் பயன்படுத்திய வார்த்தைகள் விஜய் தேவரகொண்டாவுக்கு கிட்டத்தட்ட திருமணமாகிவிட்டது என்று குறிப்பிடுவது போலவும், ராஷ்மிகாவைத்தான் அவர் திருமணம் செய்யப்போகிறார் என்பதை மறைமுகமாக சொல்லும் விதமாகவும் இருக்கிறது. எந்த அடிப்படையில் ஜான்வி கபூர் இப்படி ஒரு விஷயத்தை வெளிப்படையாக பேசி இருக்கிறார் என ரசிகர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!