
ஸ்ரீதேவியின் கடைசி ஆசை : கவுரி ஷிண்டேவுடன் கைகோர்க்கும் ஜான்வி கபூர்
இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தை என்னால் மறக்க முடியாது. இந்த படப்பிடிப்பில் அம்மா எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்பதை என்னால் நேரில் பார்க்க முடிந்தது. நானும் இதில் கொஞ்ச நேரமே வந்து போகும் விதமாக நடித்து இருந்தேன். பின்னாளில் அம்மா என்னிடம் கூறும்போது என்றாவது ஒரு நாள் நீ கவுரி ஷிண்டேவின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும்.. அது என்னுடைய ஆசை என்று கூறியிருந்தார். கவுரி ஷிண்டேவும் விரைவில் நாம் இணைந்து பணியாற்றுவோம் என கூறியுள்ளார். அந்த அளவிற்கு கவுரி ஷிண்டே எங்களது குடும்பத்தில் ஒருவராகவே இருக்கிறார்” என்று கூறியுள்ளார் ஜான்வி கபூர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!