
திருநங்கையாக நடிக்கும் சுஷ்மிதா சென்
இதுகுறித்து இதன் ஓரிஜினல் கதாபாத்திரமான ஸ்ரீகவுரி சாவந்த் கூறும்போது, "திருநங்கை கதாபாத்திரங்களை நடிகைகள் ஏற்று நடிப்பது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. அதிலும் சுஷ்மிதா சென் போன்ற முன்னணி நடிகைகள் இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தில் அதுவும் எனது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விதமாக நடிக்கிறார் என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. எனது கதை சினிமாவாகிறது என என் குருவிடம் கூறியபோது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேசமயம் அதில் சுஷ்மிதா சென் நடிக்கிறார் என்று கூறியபோது அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை” என்று கூறியுள்ளார். .





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!