
குட் ஆக இல்லாத ராஷ்மிகாவின் குட் பை படத்தின் வசூல்
ஹிந்தியில் ராஷ்மிகா கதாநாயகியாக அறிமுகமான "குட் பை" படம் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. ஒரு குடும்பப் படமாக எமோஷனலாக இருக்கிறது என விமர்சகர்களும், ரசிகர்களும் குறிப்பிட்டாலும் படத்தின் வசூல் மிக மோசமாகவே அமைந்துள்ளதாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு கோடிக்கும் குறைவாக 90 லட்சம் மட்டுமே இந்திய வசூலாகப் பெற்றதாகச் சொல்கிறார்கள்.
"புஷ்பா" படம் மூலம் பாலிவுட்டில் பிரபலமான ராஷ்மிகா, அமிதாப் பச்சன் ஆகியோர் இருந்தும் "குட் பை" படத்தின் வசூல் இப்படி இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்கிறார்கள். இத்னைக்கும் "குட் பை" படத்தின் டிக்கெட் கட்டணம் 150 ரூபாய் என்று மட்டுமே நிர்ணயிக்கப்பட்டும் ரசிகர்கள் தியேட்டர்கள் பக்கம் அதிகம் வரவில்லையாம்.
செப்டம்பர் 30ல் ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான் நடித்து வெளிவந்த "விக்ரம் வேதா" படமும் 10 நாள் ஆகியும் 100 கோடிக்குத் திண்டாடுகிறது. இந்த வாரம் வெளியான முக்கிய படமான "குட் பை" படத்தின் வசூலும் சரியாக இல்லை என்பது பாலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!