
சிரஞ்சீவிக்கு வீடியோ வாழ்த்து சொன்ன சல்மான் கான்
இந்நிலையில் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள சல்மான் கான் வீடியோ மூலம் சிரஞ்சீவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “எனது அன்பான சிரஞ்சீவி காரு, ஐ லவ் யு. "காட் பாதர்" படம் நன்றாகப் போவதாகக் கேள்விப்பட்டேன். வாழ்த்துகள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும். உங்களுக்குத் தெரியுமா சிரு காரு, இந்த நாடும் நாட்டு மக்களும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்,” எனக் கூறியுள்ளார்.
சல்மான் கானுக்கு சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் நன்றி தெரிவித்துள்ளார். சல்மானின் வீடியோவிற்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளன. இது படத்திற்கும் சரியான புரமோஷனாக அமைந்துவிட்டது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!