
ஷாரூக் - அட்லியின் ஜவான் ஓடிடி, சாட்டிலைட் உரிமை பல கோடி விற்பனை
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்ததிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. இப்படத்திற்கான ஓடிடி, சாட்டிலைட் ஆகிய உரிமைகள் சுமார் 250 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி உரிமையையும், ஜீ டிவி குழுமம் சாட்டிலைட் உரிமையையும் வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இப்படத்தை ஹிந்தியில் மட்டும் வெளியிடாமல் தென்னக மொழிகளிலும் வெளியிட உள்ளார்கள். அனைத்து மொழிகளுக்குமான உரிமைதான் அவ்வளவு விலை என்கிறார்கள். இப்படம் 2023 ஜுன் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!