
உஜ்ஜயின் கோயிலுக்குள் நுழைய முடியாமல் திரும்பிய ரன்பீர் கபூர் - ஆலியா பட்
இந்த தகவலை ஆலியா பட முன்கூட்டியே சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இதனை தொடர்ந்து அங்கே கூடிய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள், ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரையும் கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்..
போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தும் கூட ரன்பீர் கபூரால் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் ரன்பீர் கபூர், ஆலியா பட் இருவரும் திரும்பினர். அதேசமயம் இவ்வளவு களேபரங்கள் நடந்த நிலையிலும் கூட, படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி மஹாகாளேஸ்வரர் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது..


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!