
சுஷ்மிதா சென் - லலித் மோடி காதல் பிரேக் அப்?
கடந்த ஜுலை மாதம் அவர் தனது சமூக வலைத்தளத்தில் நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென்னுடன் "புதிய வாழ்க்கை" ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் சுஷ்மிதா சென் பற்றி தன்னுடைய புரொபைலில் குறிப்பிட்டிருந்ததை தற்போது நீக்கியுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. சுஷ்மிதா கடந்த வாரம் அவரது முன்னாள் ஆண் நண்பரான ரோஹ்மான் ஷால் உடன் சுற்றியதே அதற்குக் காரணம் என பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.
இருப்பினும் இன்ஸ்டா தளத்தில் சுஷ்மிதா உடன் உள்ள புகைப்படங்களை லலித் நீக்கவில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!