
மும்பை அருகில் பார்ம் ஹவுஸ் வாங்கிய அனுஷ்கா, விராட்
ஆறு மாதங்களுக்கு முன்பாக அந்த இடத்தை விராட்டும், அனுஷ்காவும் நேரில் சென்று பார்த்துள்ளனர். விராட் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். அதனால், அவரது சகோதரர் விகாஸ் கோலி பதிவுத்துறை வேலைகளைப் பார்த்து வருகிறாராம்.
மகாராஷ்டிர மாநிலம், ரைகாட் மாவட்டத்தில், அலிபாக் அருகில் உள்ள ஜிராட் என்ற கிராமத்தில் சுமார் 3350 சதுர மீட்டரில் அந்த பார்ம் அவுஸ் உள்ளதாம். இரண்டு தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 1ம் தேதி அந்த இடத்திற்கான பதிவு நடந்துள்ளதாகத் தெரிகிறது.
விராட் ஏற்கெனவே மும்பை, ஜுஹு பகுதியில் பாலிவுட் பாடகர், நடிகர் கிஷோர் குமார் குடும்பத்திற்குச் சொந்தமான பங்களாவின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்துள்ளாராம். கோல்கட்டா, புனே, டில்லி ஆகிய இடங்களுக்குப் பிறகு அந்த இடத்தில் தன்னுடைய "ஒன் 8 கம்யூன்" ரெஸ்ட்டாரன்டை விரைவில் ஆரம்பிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!