சென்னையில் ஒருமாதம் தங்கும் ஷாரூக்கான்
ஆக 29, 2022
Advertisement
ஷாரூக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ஹிந்தியில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் "ஜவான்". நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ஷாரூக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோனே சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் "ஜவான்" படத்தின் படப்பிடிப்பிற்காக ஷாரூக்கான் சில தினங்களுக்கு முன் சென்னை வந்தார். சென்னையில் அவர் ஒரு மாதத்திற்கும் மேலாக தங்கி படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என தெரிகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!