
பாய்காட் டிரெண்டுகளால் பரிதவிக்கும் பாலிவுட்
இந்த வருடத்தில் பாலிவுட்டில் வெளிவந்த பல முக்கிய படங்கள் எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளன. சமீபத்தில் ஆமீர்கான் நடிப்பில் வெளிவந்த "லால் சிங் சத்தா" படமும், சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த விஜய் தேவரகொண்டாவின் "லைகர்" படமும் "பாய்காட்" டிரெண்டிங்கில் வசமாக சிக்கி தோல்வியைத் தழுவியுள்ளன. விஜய் தேவரகொண்டா வாரிசு நடிகராக இல்லாமல் சுயமாக முன்னேறியவர்தான். இருந்தாலும் அந்தப் படத்தை கரண் ஜோஹர் இணைந்து தயாரித்ததே "பாய்காட்"டிற்குக் காரணமாக அமைந்துவிட்டது.
அடுத்து "பாய்காட்" டிரெண்டிங்கில் "பிரம்மாஸ்திரா" படம் சிக்கியுள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட், மவுனி ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஹிந்தியில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. "பாய்காட் பிரம்மாஸ்திரா" என்ற டிரெண்டிங் கடந்த சில நாட்களாக டிரெண்டிங்கில் போய்க் கொண்டிருக்கிறது. அந்த வலையில் இந்தப் படமும் சிக்குமா, தப்பிக்குமா என்பது பாலிவுட்டிலும், ரசிகர்களிடத்திலும் பெரும் கேள்வியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!