
சோனாலி போகத் தள்ளாடியபடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது
இது குறித்து கோவா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உதவியாளர்கள் சுதீர்சங்வான் மற்றும் சுக்விந்தரிடம் கோவா காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அதையடுத்து உடற்கூர் ஆய்வில் அவரது உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு அவரது சொந்த ஊரான ஹரியானா மாநிலத்துக்கு சோனாலி போகத்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது .
இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட சோனாலி போகத்தின் உதவியாளர்கள் அவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஒரு கெமிக்கலை 1.5 கிராம் அளவு சோனாலி போகத்தின் குளிர்பான பாட்டிலில் கலந்து அவரை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாக விசாரணையில் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், ஹோட்டலுக்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் , சோனாலி போகத் தள்ளாடியபடியே செல்ல, அவரை கைத்தாங்கலாக உதவியாளர் அழைத்துச் செல்லும் காட்சி இடம்பெற்ற வீடியோ போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து சோனாலி போகத்தின் மரணத்திற்கு காரணமான அவரது உதவியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!