
ஆமீர்கானுக்கு அதிர்ச்சி கொடுத்த லால் சிங் தத்தா
குறிப்பாக ஆமீர்கானின் லால் சிங் தத்தா படம் 1300 காட்சிகள் முதல் நாள் திரையிடப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆயிரம் காட்சிகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படம் முதல் நாளில் 10.75 கோடி வசூல் செய்து இருப்பதாக பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன . இதுவரை ஆமீர்கான் நடித்து வெளியான படங்களின் முதல்நாள் வசூலில் இதுவே மிக குறைவானது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஹாலிவுட்டில் வெளியாகி பல ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஒரு படத்தின் ஹிந்தி ரீமேக் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருப்பது பாலிவுட் சினிமாவையே அதிர விட்டு இருக்கிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!