
மராட்டிய மொழி படத்தில் ஷான்வி
ராந்தி என்ற இந்த படத்தில் நடிப்பது குறித்து ஷான்வி கூறியிருப்பதாவது: இப்போது நான் கன்னட சினிமாவில் தீவிரமாக பணியாற்றி வருகிறேன். இந்திய மொழிகள் அனைத்திலும் நடிக்க வேண்டும் என்கிற எனது கனவின் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறேன். குறிப்பாக அதுல் குல்கர்னியுடன் நடிக்க இருப்பதை நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் ஒரு பெண்ணாக நடிக்கிறேன். ஹிந்தியை தாய்மொழியாக கொண்ட நான் படத்தில் நடிப்பதற்காக கன்னடம், மலையாளம், தெலுங்கு, சீன மொழிகளை கற்றுக் கொண்டேன். இப்போது புதிய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள இருக்கிறேன். இது சவாலாக இருக்கிறது. என்கிறார் ஷான்வி.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!