
என் படத்தை புறக்கணிக்காதீர்கள் : ஆமீர்கான் உருக்கமான வேண்டுகோள்
இந்த நிலையில் இணையதளத்தில் பாய்காட் லால்சிங் சத்தா என்ற ஹேஷ்டாக் வேகமாக பரவி வருகிறது. 2015ம் ஆண்டு நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதால் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று தனது மனைவி அறிவுறுத்தியதாகக் கூறினார். அந்த வீடியோக்களை இப்போது பகிரப்பட்டு இந்தியாவை விரும்பாதவர் படத்தை இந்தியர்கள் பார்க்ககூடாது என்று கூறி வருகிறார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத ஆமீர்கான் என்னை தவறாக புரிந்து கொண்டு என் படத்தை புறக்கணிக்காதீர்கள் என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் இந்தியாவை பிடிக்காதவன் என்று சிலர் நம்புவது வருத்தமாக இருக்கிறது. அது முற்றிலும் பொய். நான் என் தாய்நாட்டை மிகவும் நேசிக்கிறேன். சிலர் என்னைப் பற்றி தவறாக உணர்வது துரதிர்ஷ்டமானது. என் படங்களைப் புறக்கணிக்காதீர்கள். தயவு செய்து பாருங்கள்"" என்று தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!