
ரன்வீர் சிங்கிற்கு ஆடை சேகரிக்கும் தொண்டு நிறுவனம்
இந்த நிலையில் மும்பையில் ரன்வீர் சிங் மீது தொண்டு நிறுவனம் ஒன்று போலீஸில் புகார் அளித்திருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, ரன்வீர் சிங்கின் புகைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதோடு, ரன்வீர் சிங்குக்காக பொதுமக்களிடம் ஆடைகள் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறது.
இந்தூரை சேர்ந்த இன்னொரு தொண்டு நிறுவனமான"நேகி கீ திவார்" ரன்வீர் சிங்குக்குக் கொடுப்பதற்காக பொதுமக்களிடம் பழைய ஆடைகளைச் சேகரித்து வருகிறது. ஆடைகள் சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியிருக்கிறது. பல இடங்களில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தாத ஆடைகளை போடுவதற்கு டொனேஷன் பாக்சையும் திறந்திருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!