
பாலிவுட்டில் அதிக வரி செலுத்தும் நடிகர் அக்ஷய்குமார்
தமிழ்நாட்டில் அதிகமான வருமானவரி செலுத்தியவர் ரஜினிகாந்த். இதற்கான விருதை அவருக்கு வருமானவரித்துறை வழங்கியது. இதனை ரஜினியின் மகள் சவுந்தர்யா பெற்றுக் கொண்டார். இதேபோன்று பாலிவுட்டில் அதிக வருமானவரி செலுத்தியவர் அக்ஷய்குமார். அவருக்கும் இதேபோன்று சான்றிதழை வருமான வரித்துறை வழங்கி உள்ளது. தற்போது அக்ஷய்குமார் லண்டனில் படப்பிடிப்பில் இருப்பதால் அவரது சார்பாக அவரது செயலாளர் பெற்றுக் கொண்டார். அக்ஷய்குமார் தொடர்ந்து 6வது முறையாக இந்த சான்றிதழை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!